உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜி ஸ்கொயர் சார்பில் ரத்த தான முகாம்

ஜி ஸ்கொயர் சார்பில் ரத்த தான முகாம்

சென்னை, சென்னை, நீலாங்கரையில் 'ஜி ஸ்கொயர்' சார்பில் ரத்த தான முகாம், நேற்று முன்தினம் நடந்தது.தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிர்வாக இயக்குனர் பாலா என்ற ராமஜெயத்தின் பிறந்த நாளையொட்டி, 'டிராப்ஸ் ஆப் ஹோப்' என்ற பெயரில்,ரத்த தான இயக்கம் துவங்கப்பட்டது.நீலாங்கரை ஜி ஸ்கொயர்பீச் வாக்கில், நேற்று முன்தினம் மெட்ராஸ் பிளட் பீரோ அமைப்புடன் இணைந்து, ரத்ததான முகாம் நடந்தது. நிறுவன ஊழியர்கள்,பொதுமக்கள் என, 100க்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்தனர்.இதில், சேகரிக்கப்பட்ட ரத்தம், ஹிந்து மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக, ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

A P
மே 08, 2024 09:14

ஜன நாயக நன்னாட்டில் இங்கு யாரும் கருத்து எழுதவில்லையே என்று மிக வருத்தமாக உள்ளது மனசில் உள்ளதை கொட்டித் தீர்க்க வேண்டியது தானே நியாயம் ரத்த தானம் கொடுப்பது நல்ல செயல் தானே சிரிக்காதீர்கள் நல்லதை மட்டுமாவது பாராட்டுவோம்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ