உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புளூ ஸ்கை டி-20 கிரிக்கெட் குமார் சி.சி., த்ரில் வெற்றி

புளூ ஸ்கை டி-20 கிரிக்கெட் குமார் சி.சி., த்ரில் வெற்றி

சென்னை:புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், குரு ராகவேந்திரா கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.இதில் மொத்தம் ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன், தலா ஒரு முறை மோத வேண்டும். அதிக வெற்றிபெறும் நான்கு அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி நேற்று முன்தினம் நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் 'ஐடிக்யூ சிசி' அணியும், குமார் சிசி அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய ஐடிக்யூ சிசி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.பின், சவாலான இலக்குடன் களமிறங்கிய குமார் சிசி அணியின் ஷியாம், அரவிந்த் இருவரும் அதிரடியாக ஆடி, எதிரணியின் பந்துகளை துவம்சம் செய்தனர்.ஷியாம் 57 பந்துகளில் 97 ரன்களும், அரவிந்த் 44 பந்துகளில் 73 ரன்களும் குவிக்க, அந்த அணி 19.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு, 197 ரன்கள் எடுத்து 'த்ரில்' வெற்றி பெற்றது. ஷியாம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை