| ADDED : ஜூலை 20, 2024 01:08 AM
சென்னை:சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மதுராந்தகம், சமத்துவபுரத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் பெயரில் இருந்து, கடிதம் ஒன்று நேற்று வந்தது.அதில், பா.ம.க.,வை தரக்குறைவாக பேசும், தி.மு.க., அரசுக்கும், கட்சிக்கும் ஒரு பாடமாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.அதிர்ச்சியடைந்த ரயில்வே போலீசார், ஆர்.பி.எப்., போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்தனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. விசாரணையில், மேகநாதன் என்பவர் தபால் நிலையத்தில் பணிபுரிபவர் என்பதும், அவரது பெயரில் போலியாக கடிதம் அனுப்பியதும் தெரிந்தது.கடிதம் அனுப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.