உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மொபைல்போன் பறித்த சிறுவன் கைது

மொபைல்போன் பறித்த சிறுவன் கைது

திருவொற்றியூர், திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பிரபு, 32; ஆட்டோ ஓட்டுனர், கடந்த ஏப்., 29ம் தேதி, காசிமேடில் இருந்து, எர்ணாவூர் நோக்கி, எண்ணுார் விரைவு சாலையில் ஆட்டோவில் சென்றார். அப்போது, மஸ்தான் கோவில் சந்திப்பு அருகே, பைக்கில் இருவர் ஆட்டோவை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி பிரபுவின் மொபைல்போனை கேட்டுள்ளனர். பயத்தில் அவர், 7,500 ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை கொடுத்துள்ளார். பின், இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.இது குறித்த புகாரின்படி, திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர்.இதில் தொடர்புடைய எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த, 17 வயது சிறுவனை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை