உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் குழாயில் உடைப்பு: சாலை பணி சுணக்கம்

குடிநீர் குழாயில் உடைப்பு: சாலை பணி சுணக்கம்

சென்னை, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை - நுாறடிச்சாலை இடையிலான 7 கி.மீ., மாதவரம் நெடுஞ்சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது.இச்சாலை வழியாக, சென்னை, எண்ணுார் துறைமுகங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், சென்னைக்கு பொருட்களை ஏற்றி, இறக்குவதற்கு வரும் சரக்கு லாரிகள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கார்கள் உள்ளிட்டவை அதிகளவில் பயணித்து வருகின்றன.புழல் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, எம்.கே.பி., நகர் நீரேற்று நிலையத்திற்கு இச்சாலை வழியாக குடிநீர் செல்கிறது. இதற்காக, சாலைக்கு அடியில், 50 ஆண்டுகளுக்கு முன் ராட்சத குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.சாலை விரிவாக்க பணிகள், அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. வடகிழக்கு பருவமழை மற்றும் 'மிக்ஜாம்' புயலால், கடந்தாண்டு, இறுதியில் சாலை கடும் சேதம் அடைந்தது.இதை சீரமைப்பதற்கு 1 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில், 2.5 கி.மீ., சாலையில் சீரமைப்பு பணியை, மார்ச் மாதம், நெடுஞ்சாலைத்துறை துவங்கியது.இதில், 50 முதல், 100 அடி நீளம் என, 1 கி.மீ., துாரத்திற்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள சாலை இன்று வரை அமைக்கப்படவில்லை. இதற்கு காரணம், சாலைக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள சென்னை குடிநீர் வாரிய ராட்சத குழாயில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வழிவதால், சாலையை சீரமைப்பதில் சிக்கல் எழுகிறது.குழாய் உடைந்த பகுதிகளில் பள்ளம் தோண்டி தற்காலிகமாக நடவடிக்கையில் ஈடுபடும் குடிநீர் வாரிய அதிகாரிகள், எம் - சாண்ட் கொட்டி மூடி செல்வதும், கனரக வாகனங்கள் வேகத்திற்கு தாங்காமல், மீண்டும் உடைப்பு ஏற்படுவதும், இரண்டு மாதங்களாக தொடர்கிறது.இதனால், சாலை பணியை முடிக்க முடியாமல் நெடுஞ்சாலைத்துறையினர் திணறி வருகின்றனர். சாலை மீண்டும் புழுதி மண்டலமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், சாலை பணியை முடிப்பதற்கு ஒத்துழைப்பு தரும்படி, சென்னை குடிநீர் வாரியத்திற்கு, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக கடிதம் அனுப்பபட்டுள்ளது.இது குறித்து, சென்னை குடிநீர் வாரியத்தினர் கூறுகையில், 'மாதவரத்தின் குடிநீர் தேவைக்காக, இந்த குழாயை பரிசோதித்து, தினமும், 70 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதில், சில இடங்களில், கசிவு ஏற்படுகிறது. அவற்றை விரைவாக சீரமைத்து வருகிறோம். ஆனாலும், அந்த பணி முழுமையாக முடிய, 1 மாதமாகி விடும்' என்றனர்.

இரண்டு மாத சாலை மீண்டும் உடைப்பு

தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலத்தில், செம்பாக்கம் திருமலை நகர் முதல் பிரதான சாலை செல்கிறது. குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் வழியாக ஜி.எஸ்.டி., - தாம்பரம் வேளச்சேரி சாலைகளை, இணைப்பதால், ஏகப்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. முக்கியமான இச்சாலையில், புதிதாக சாலை போடுவதற்காக, மார்ச் மாதம், பழைய சாலையை சுரண்டி, தார் சாலை போட்டனர். சாலை பணி முடிந்து இரு மாதங்கள் ஆன நிலையில், மூடுகால்வாய் அமைப்பதற்காக, மீண்டும் இச்சாலையில், பொதுப்பணித் துறை சார்பில் பள்ளம் தோண்டப்படுகிறது.புதிதாக சாலை அமைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையில், அதே சாலையில் மூடுகால்வாய் அமைக்க மீண்டும் பள்ளம் தோண்டுவது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ