உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாய்ப்பால் விழிப்புணர்வு மேயர் பங்கேற்பு

தாய்ப்பால் விழிப்புணர்வு மேயர் பங்கேற்பு

ராயபுரம், உலக தாய்ப்பால் ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு, சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில், சமூக குழந்தைகள் நிலையத்துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை மேயர் பிரியா தலைமையில், நேற்று நடைபெற்றது.இதில், பிறந்த அரைமணி நேரம் முதல் ஆறு மாதம் வரையிலான பச்சிளங்குழந்தைகளுக்கு, தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து, எடுத்துரைக்கப்பட்டது. பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டசத்து நிறைந்த உணவுகள் உண்பதன் மூலமே, குழந்தைகளுக்கு பாலுாட்டி வளர்க்க முடியும் என்பது விளக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், குறைவான உடல் எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு, இடையறாது தாய்ப்பால் மட்டுமே அளித்து, ஆரோக்கியமாக குழந்தைகளை வளர்த்த தாய்மார்களுடன் மேயர் பிரியா கலந்துரையாடி, பரிசுகளை வழங்கினார். ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ