உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் பஸ் மோதி கொத்தனார் பலி

தனியார் பஸ் மோதி கொத்தனார் பலி

பள்ளிக்கரணை,வெட்டுவாங்கேணி, 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பூபாலன், 59; கொத்தனார். இவர், சேலையூர், கேம்ப் ரோட்டில் வேலைக்கு செல்வதற்காக, தன் பைக்கில் வேளச்சேரி- - தாம்பரம் பிரதான சாலையில் நேற்று காலை சென்று கொண்டிருந்தார்.பள்ளிக்கரணை, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து பைக் மீது மோதியது. இதில், பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பூபாலன் தலை நசுங்கி உயிரிழந்தார்.பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநரான திருநெல்வேலியைச் சேர்ந்த கிங்ஸ்லி ஜோ அதிபன், 27, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை