உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எல்காட் அதிகாரி வீட்டில் திருட்டு

எல்காட் அதிகாரி வீட்டில் திருட்டு

சென்னை, சேப்பாக்கம், முகமது அப்துல்லா இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் உமா, 55; நந்தனத்திலுள்ள 'எல்காட்' நிறுவன துணை மேலாளர்.நேற்று காலை, வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றார். மதியம், 3:00 மணியளவில், இவரது வீட்டில் கதவு திறந்து கிடப்பதாக, அருகில் வசிப்போர் தகவல் கூறியுள்ளனர்.உடனே உமா வீட்டிற்கு சென்று பார்த்த போது, மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, 14 சவரன் நகை, 75,000 ரூபாயை திருடிச் சென்றது தெரிந்தது.இதுகுறித்த புகாரின்படி திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிந்து,நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி