உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தண்டவாளம் அருகே எரிந்த நிலையில் உடல்

தண்டவாளம் அருகே எரிந்த நிலையில் உடல்

ஓட்டேரி:வியாசர்பாடி, ஜீவா ரயில் நிலையம் அருகே, மேட்டுப்பாளையம் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில், முட்புதர்களின் நடுவே 75 சதவீதம் எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த ஓட்டேரி போலீசார், உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அடையாளம் தெரியாத உடல் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ