உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கருகும் சுவர் பூங்கா: கூடுதல் பராமரிப்பு அவசியம்

கருகும் சுவர் பூங்கா: கூடுதல் பராமரிப்பு அவசியம்

அண்ணா நகர், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மேம்பால சுவர் பூங்காக்கள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை மாநகராட்சி சார்பில், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், சென்னையை அழகுபடுத்தும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதில் குறிப்பாக, மேம்பாலங்களின் சுவரில், பல லட்சம் ரூபாய் செலவில் சுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து நீர் தெளித்து வந்தனர்.அந்த வகையில், நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேம்பாலங்களையும், பல லட்சம் ரூபாய் செலவில் அழகுபடுத்தும் பணிகளை, மாநகராட்சி மேற்கொண்டது.அதன்படி, அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் 'ஆர்ச்' பகுதியில், நெடுஞ்சாலைத் துறையின் மேம்பாலத்தில், 3 கோடி ரூபாய் செலவில், இரு பாதைகளிலும் சுவர் பூங்காக்கள், இரும்புகளில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.மேலும், அங்குள்ள 48 துாண்களில், 10 லட்சம் ரூபாய் செலவில், சென்னை மாநகராட்சி வண்ணம் பூசுதல் மற்றும் வண்ண விளக்குதல் அமைத்தல் பணிகளை துவங்கியது.அதன்பின், போதை நிதி இல்லாததால், பணிகள் அரைகுறையாக விடப்பட்டன. அதேபோல், திருமங்கலம் மேம்பாலத்திலும் செடிகள் பராமரிப்பின்றி வாடி கிடக்கின்றன.தற்போது, சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிக அளவில் உள்ளது. இதனால், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள இந்த சுவர் பூங்காக்களில் உள்ள செடிகள் காய்ந்து வருகின்றன.அதிக அளவு வெயில் தாக்கம் இருப்பதால், இந்த பூங்காக்கள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'மேம்பாலங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுவர் பூங்காக்களில், கோடைக்காலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்செடிகள் வெயிலில் காய்ந்து போகும் சூழல் ஏற்படும். எனவே, இவற்றின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால், செடிகள் காய்ந்து போவதை தடுக்க முடியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ