உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியாபாரியிடம் பணம் அபேஸ்

வியாபாரியிடம் பணம் அபேஸ்

ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, பொன்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 58; தள்ளுவண்டியில் பிளாஸ்டிக், அலுமினிய பாத்திரம் விற்று வருகிறார்.நேற்று மதியம் 2:30 மணியளவில், டாக்டர் பெசன்ட் சாலையிலுள்ள காவலர் குடியிருப்பு அருகே வியாபாரம் செய்தார்.அப்போது அங்கு வந்த, 40 வயது மதிக்கத்தக்க நபர், பிளாஸ்டிக் பக்கெட் வாங்கியுள்ளார்.சிறிது நேரம் கழித்து வந்த அதே நபர், 500 ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார்.தன்னிடம் இல்லை என சுப்பிரமணி கூறியுள்ளார். அப்போது, 'தன் தாய் அருகிலுள்ள மருத்துவமனையில் டாக்டராக உள்ளதாகவும், அவரிடம் சில்லரை கிடைக்கும்' எனக் கூறியுள்ளார்.இதை நம்பிய சுப்பிரமணி, தனக்கும் சில்லரை வேண்டுமென, 3,000 ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அந்த நபர் வரவில்லை. இதுகுறித்த புகாரின்படி, ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை