மேலும் செய்திகள்
பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து,,
27-Aug-2024
காசிமேடு:காசிமேடு, இந்திரா காந்தி நகர் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகங்கை, 62. இவரதுகுடிசை வீட்டில், நேற்று அதிகாலை 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.சற்று நிமிடத்தில், மளமளவென பரவி அருகில் இருந்த 14 வீடுகளும் கொழுந்து விட்டு எரிய துவங்கின. வீடுகளில் இருந்தோர் பதறியடித்து வெளியேறினர். இதில், வீட்டில் இருந்த ஆவணங்கள், பாடப்புத்தகங்கள், துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் என, அனைத்தும் எரிந்தன.ராயபுரம், தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 10க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள், 14 வீடுகளும் தீக்கிரையாயின. வீட்டில் ஏற்பட்ட மின் விபத்தா அல்லது வெளியாட்கள் நாச வேலையா என, காசிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.தகவலறிந்து ராயபுரம்எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறினார்.
27-Aug-2024