உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பால் திருட்டுக்கு சிசிடிவியை நிறுத்தவில்லை: ஆவின் சமாதானம்

பால் திருட்டுக்கு சிசிடிவியை நிறுத்தவில்லை: ஆவின் சமாதானம்

சென்னை,திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பண்ணையில், பால் பாக்கெட்டுகளை திருடிச்சென்று, கடைகளில் விற்பனை செய்யப்படுவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பால் பண்ணைகளில் 'சிசிடிவி' கேமராக்கள் இயக்கத்தை நிறுத்தவிட்டு பால் பாக்கெட் திருட்டு அதிகளவில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. துறையின் லஞ்ச ஒழிப்பு போலீசார் வாயிலாக, இதேபோல, பல மாவட்டங்களில் திருட்டு நடப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆவின் பால் பண்ணைகளில் சிசிடிவி கேமராக்கள் இயக்கம் குறித்து, பொது மேலாளர்களிடம், ஆவின் நிர்வாகம் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு சிசிடிவி கேமராக்கள் சரியாக இயங்குவதாகவும், சில கேமராக்கள் மட்டுமே வேலை செய்யவில்லை என்றும் மாவட்ட பொது மேலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த பதிலை ஏற்று ஆவின் நிர்வாகம் சமாதானம் அடைந்துள்ளது. இப்பிரச்னையை பால்வளத்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்குலஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து சென்றனர். ஆனால், அரசிற்கு அவப்பெயர் ஏற்படும் என்பதாலும், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்க இருப்பதாலும், இப்பிரச்னையில் அடக்கிவாசிக்க, ஆவின் லஞ்ச ஒழிப்புபோலீசாருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இப்பிரச்னையில், விசாரணை அதிகாரியை நியமித்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தால் மட்டுமே, முறைகேடு நடந்தை உறுதி செய்ய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ