உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பீச் - அரக்கோணம் தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்

பீச் - அரக்கோணம் தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை:சென்னை கடற்கரை -- விழுப்புரம் மார்க்கத்தில், கடற்கரை பணிமனையில் ரயில் பாதை மேம்பாட்டு பணி நடப்பதால், புறநகர் மின்சார ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.l சென்னை கடற்கரை -- ஆவடி இன்று காலை 10:25, 10:35, 11:05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், மதியம் ஆவடி - சென்னை கடற்கரைக்கு 2:45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

பாதி வழியில் ரத்து

l திருத்தணி -- சென்னை கடற்கரை இன்று காலை 8:50 மணி ரயில், வியாசர்பாடி ஜீவா- - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.lதிருவள்ளூர் -- சென்னை கடற்கரை இன்று காலை 11:00 மணி ரயில், வியாசர்பாடி ஜீவா -- சென்னை கடற்கரை இடையே, பகுதி ரத்து செய்யப்படுகிறது.lகடம்பத்துார் -சென்னை கடற்கரை மதியம் 12:05 மணிக்கு புறப்படும் ரயில், வியாசர்பாடி ஜீவா -- சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.l சென்னை கடற்கரை -- திருத்தணி மதியம் 12:10 மணி ரயில், சென்னை கடற்கரை - -வியாசர்பாடி ஜீவா இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரல் நிலையத்தில் இருந்து 12:15 மணிக்கு புறப்படும்.lசென்னை கடற்கரை -- திருவள்ளூர் மதியம் 1:05 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், சென்னை கடற்கரை -- வியாசர்பாடி ஜீவா இடையே, பகுதி ரத்து செய்யப்படுகிறது. மதியம் 1:10 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும்.lசென்னை கடற்கரை -- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மதியம் 1:50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சென்னை கடற்கரை -- வியாசர்பாடி ஜீவா இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.சென்ட்ரல் நிலையத்தில் இருந்து மதியம் 1:55 மணிக்கு புறப்படும்.lசென்னை கடற்கரை -- அரக்கோணம் மதியம் 2:25 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை கடற்கரை -- ஆவடி இடையேபகுதி ரத்து செய்யப்படுகிறது ஆவடியில் இருந்து 3:10 மணிக்கு புறப்பட்டு செல்லும் மூன்று ரயில்களின் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை