சென்னை, ரயில்பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:l சென்னை சென்ட்ரல் -- அரக்கோணத்துக்கு, வரும் 11ம் தேதி இரவு 7:30, 7:45, 8:20, 9:05, 10:00, 10:45 மணி மின்சார ரயில்கள், திருவள்ளூர் -- அரக்கோணம் இடையே விரைவு பாதையில் இயக்குவதால், இந்த ரயில்கள் செஞ்சிபனப்பாக்கத்தில் நிற்காதுl சென்னை சென்ட்ரல் -- திருத்தணிக்கு, வரும் 11ம் தேதி இரவு 8:10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செஞ்சிபனப்பாக்கத்தில் நிற்காதுl திருத்தணி -- சென்னை சென்ட்ரலுக்கு, வரும் 11ம் தேதி இரவு 8:45 மணி, 9:45 மணி மின்சார ரயில்கள், அரக்கோணம் -- திருவள்ளூர் இடையே விரைவு பாதையில் இயக்குவதால், செஞ்சிபனப்பாக்கத்தில் நிற்காதுl அரக்கோணம் -- சென்னை சென்ட்ரலுக்கு, வரும் 11ம் தேதி இரவு 9:45 மணிக்கு இயக்கப்படும் ரயில், செஞ்சிபனப்பாக்கத்தில் நிற்காதுl சென்னை சென்ட்ரல் -- திருத்தணிக்கு, வரும் 12ம் தேதி அதிகாலை 3:50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், செஞ்சி பனப்பாக்கத்தில் நிற்காதுl அரக்கோணம் -- சென்னை சென்ட்ரலுக்கு வரும் 12ம் தேதி அதிகாலை 3:45 மணி, 4:00 மணி, 4:25 மணி, 5:25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், செஞ்சிபனப்பாக்கத்தில் நிற்காதுl திருத்தணி -- சென்னை சென்ட்ரலுக்கு, வரும் 12 ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு இயக்கப்படும் ரயில், செஞ்சிபனப்பாக்கத்தில் நிற்காதுஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.