| ADDED : ஆக 12, 2024 04:11 AM
சைதாப்பேட்டை:தொண்டை மண்டலத்தில் உள்ள பிரதான சிவாலயங்களில் ஒன்றாக சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவில், 450 ஆண்டுகள் பழமையானது.இக்கோவில் தேர், திருவிழா முடிவடைந்ததும் அதை பாதுகாக்க தார்ப்பாய், பேனர், பெரிய பாலிதீன் கவர்களால் மூடியுள்ளனர். ஆனால், அது போதுமானதாக இல்லை. இதனால், மழை, பனி, வெயில், துாசியால், தேர் வீணாகி வருகிறது. மேலும், சமூக விரோதிகளாலும் ஆபத்து உள்ளது.வரும் பருவ மழைக்காலத்தில் மேலும் சேதமடையும் நிலைமை உள்ளது. எனவே, கூண்டு அமைத்து தேரை பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.