சீதாப்பழம் சீசன்: வரத்து அதிகரிப்பு
சென்னை, சீசன் களைகட்ட துவங்கியதன் காரணமாக, ஆந்திராவில் இருந்து சீதாப்பழம் வரத்து அதிகரித்து உள்ளது.ஆந்திராவின் கர்நுால், கடப்பா, சித்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சீதாப்பழங்கள் அதிகளவில் விளைகிறது. தமிழகத்தில் வேலுார், திருப்பத்துார் உள்ளிட்ட இடங்களில் சீதாப்பழங்கள் விளைகின்றன. தற்போது, சீதாப்பழ சீசன் களைகட்ட துவங்கியுள்ளது.இதனால், ஆந்திராவில் இருந்து இப்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. தினமும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் வரத்து உள்ளது. வரத்து அதிகரிப்பு காரணமாக விலையும் மலிவாக உள்ளது. ஒரு கிலோ சீதாப்பழம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மார்க்கெட்டுகள் மட்டுமின்றி சாலையோர கடைகள், வாகனங்களில் வைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.