உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பனச்சியம்மன் கோவில் குளத்தில் துாய்மை பணி

பனச்சியம்மன் கோவில் குளத்தில் துாய்மை பணி

நங்கநல்லுார்:நங்கநல்லுார் பனச்சியம்மன் கோவில் குளம் 2.5 ஏக்கர் பரப்பில் உள்ளது. குளத்தில் மீன்கள் இறந்து மிதந்தன. குளத்தில் அதிகளவில் பாசி படிந்திருந்தது. நடைபாதையில் குப்பை கழிவுகள் குவிந்து கிடந்தன. இதனால், குளத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, மண்டலக் குழு தலைவர் சந்திரன் மேற்பார்வையில், மாநகராட்சி ஊழியர்கள், 'யுர்பேசர்' நிறுவன துாய்மை பணியாளர்கள் இணைந்து துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். குளக்கரையில் கிடந்த குப்பை, குளத்தில் இறந்த மீன்கள், பாசிகளை அப்புறப்படுத்தி, குளத்தை சுத்தப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !