உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, தமிழ்நாடு அனைத்துவகை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பணியாளர்கள் யூனியன் தலைவர் செல்வராஜ் தலைமையில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், 'கலைஞரின் கனவு இல்லத் திட்டம், முதல்வர் மருந்தகம் திட்டங்களை வீட்டு வசதி சங்கங்கள் வாயிலாக செயல்படுத்த வேண்டும்; பணியாளர்களின் ஓய்வு கால நிதிப்பயன்களை வழங்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. மேலும், 'பணியாளர்கள் இணையத்தில் பெற்ற வீட்டுவசதி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பணியாளர் வாரிசு நியமனத்தை இதர சங்கங்களிலும் செயல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட, 30 அம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ