உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவல் கரங்களுக்கு 3 மீட்பு வாகனங்கள் கமிஷனர் துவக்கி வைப்பு

காவல் கரங்களுக்கு 3 மீட்பு வாகனங்கள் கமிஷனர் துவக்கி வைப்பு

வேப்பேரி, சென்னை காவல் துறையில், காவல் கரங்கள் உதவி மையம், 2021ம் ஆண்டு ஏப்., 21ம் தேதி துவக்கப்பட்டது. இதன் வாயிலாக ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு, காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், 'தி ரோட்டரி கிளப் மெட்ராஸ் சென்ட்ரல்' அமைப்பின் சார்பில், காவல் கரங்கள் குழுவினருக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, மூன்று இலகுரக வாகனங்களை வழங்கினர். அவற்றை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், நேற்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர், 'தி ரோட்டரி கிளப் மெட்ராஸ் சென்ட்ரல்' நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை