உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதியவரின் நேர்மைக்கு கமிஷனர் வெகுமதி

முதியவரின் நேர்மைக்கு கமிஷனர் வெகுமதி

வேப்பேரி, சாலையில் கேட்பாரற்று கிடந்த, 37,500 ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவரை, போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கரன், 69. கடந்த 26ம் தேதி காலை, புனிததோமையர் மலை, ரூத்ரா சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது சாலையில் கேட்பாரற்று கிடந்த கவரை எடுத்து பார்த்தார். அதில், 37,500 ரூபாய் இருந்தது. உடனே அருகில் உள்ள புனிததோமையர் மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். முதியவர் சங்கரனை நேற்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். மேலும் நற்சான்றிதழும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ