உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புறநகர்களுக்கு இடம்பெயர்வதில் தொழில் நிறுவனங்கள் ஆர்வம்

புறநகர்களுக்கு இடம்பெயர்வதில் தொழில் நிறுவனங்கள் ஆர்வம்

சென்னை: நகரங்களில், உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களால் அதிக மாசு ஏற்படுகிறது. இதனால், இந்நிறுவனங்கள் புறநகருக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயர விரும்பும் நிறுவனங்களுக்கு, புதிய இடத்-தில் தொழில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, மானியம் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பில், 75 சதவீதம் அல்லது அதிக-பட்சம் 20 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தனியார் தொழிற்கூடங்கள், நகரங்களுக்கு வெளியில் இடம்பெ-யர செய்யும் திட்டத்தில், குறைந்தபட்சம், 10 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால், மாநிலம் முழுதும் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, தொழில் நிறுவனங்கள் பயன்பெற, கடந்த நிதியாண்டில் குறைந்தபட்ச அளவு இரண்டு ஏக்கராக குறைக்கப்பட்டது. இத-னால், பல தொழில் நிறுவனங்கள், நகருக்கு வெளியே இடம்பெ-யர முன்வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை