உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தகவல் தருவதில் இழுத்தடிப்பு மனுதாரருக்கு இழப்பீடு 

தகவல் தருவதில் இழுத்தடிப்பு மனுதாரருக்கு இழப்பீடு 

அம்பத்துார், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், இரண்டு ஆண்டை கடந்தும் உரிய தகவல் அளிக்காததால், மனுதாரருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. சென்னை அம்பத்துார், வெங்கடாபுரம், எம்.டி.எச்., சாலையை சேர்ந்தவர் பி.ரமேஷ், 54. அவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மாதவரம் தாலுகா தலைமை இடத்து துணை வட்டாட்சியருக்கு, 2022 பிப்., 8ல், இரண்டு மனுக்கள் கொடுத்தார். அதில், மாதவரம் தாலுகா, சூரப்பட்டு கிராமத்தில், மேய்க்கால் வகைப்பாடு கொண்ட அரசு நிலத்தை தனியார் சிலர் வீட்டு மனையாக பிரித்து விற்பதை தடுத்து, அந்த நிலத்தை மீட்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, ஐந்து கேள்விகளுக்கு பதில் கேட்டிருந்தார். ஆனால், இரண்டு ஆண்டை கடந்தும், எந்த தகவலும், அவருக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் புகார் செய்தார். உரிய காலத்தில் தகவல் தராமல் மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, இழப்பீடாக 5,000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. பொது அதிகார அமைப்பின் ஜூன், 27ம் தேதி வழங்கப்பட்டது. ரமேஷின் மனுவில் குறிப்பிட்ட இடம், அரசு புறம்போக்கு வகைப்பாட்டில், மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்றும், கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமானது என்றும், மாதவரம் வட்டாட்சியரால், தகவல் அளிக்கப்பட்டது. உத்தரவின்படி, மனுதாரருக்கான இழப்பீடு பொது அதிகார அமைப்பின் சார்பில், ஜூன் 27ம் தேதி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை