உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கமிஷனர் பெயரில் மோசடி சைபர் கிரைமில் புகார்

கமிஷனர் பெயரில் மோசடி சைபர் கிரைமில் புகார்

சென்னை, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், அனைத்து தரப்பினராலும் நன்கு அறியப்படும் நபராக உள்ளார். மேலும், சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தும் நபராகவும் இருக்கிறார்.அவ்வப்போது, அவரது பெயரில் போலியான 'பேஸ்புக்' கணக்கு துவங்கி, மக்களிடம் பணம் பறிக்கும் செயலில், மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி, 'வாட்ஸாப்' பண பரிமாற்றம் வாயிலாக பணம் பறிக்கும் முயற்சியில், சமீபத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்தும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் நேற்று முன்தினம், அவர் புகார் அளித்துள்ளார்.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ