உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காங்., கட்சி ஆர்ப்பாட்டம்

காங்., கட்சி ஆர்ப்பாட்டம்

எம்.கே.பி.நகர், தனியார் 'டிவி'க்கு பேட்டியளித்த தமிழக பா.ஜ., தற்காலிக பொறுப்பாளர் எச்.ராஜா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை அவதுாறாக பேசியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு ஏற்பாட்டில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில், எம்.கே.பி.நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை