உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கட்டுமான நிறுவனத்தின் விதிமீறல் கமிஷன் விசாரணையில் அம்பலம்

கட்டுமான நிறுவனத்தின் விதிமீறல் கமிஷன் விசாரணையில் அம்பலம்

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், 'சாரே ஷெல்டர்ஸ் புராஜக்ட்ஸ்' நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, பழனிசாமி, ராதா ஆகியோர், 2012ல் கட்டுமான நிறுவனத்துடன் விற்பனை ஒப்பந்தம் செய்தனர்.இதற்காக, அவர்கள், 27.92 லட்சம் ரூபாயை செலுத்தினர். ஒப்பந்தப்படி, 24 மாதங்களில் வீட்டை ஒப்படைப்பதாக, கட்டுமான நிறுவனம் தெரிவித்து இருந்தது.ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் அந்நிறுவனம் கட்டுமான பணிகளை முடிக்கவில்லை. இது தொடர்பாக, பழனிசாமி, ராதா ஆகியோர், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டனர்.இந்த மனு தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர் சுனில்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பதில் அளிக்க உரிய அழைப்பு விடுத்தும், கட்டுமான நிறுவனம் தரப்பினர் ஆஜராகவில்லை. கட்டுமான பணிகளை குறித்த காலத்தில் முடிக்காததால், வீட்டை ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் செலுத்திய, 27.92 லட்சம் ரூபாய் வட்டியுடன் கட்டுமான நிறுவனம் திருப்பித்தர வேண்டும். வழக்கு செலவுக்காக, மனுதாரருக்கு, 25,000 ரூபாய் அளிக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட திட்டத்தை, ரியல் எஸ்டேட் சட்டப்படி முறையாக பதிவு செய்யாததால், கட்டுமான நிறுவனத்துக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மனுதாரர் தொடர்பான வீடு விற்பனை ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ