உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேர்தல் முடிந்தும் கூட்டம் நடத்தவில்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

தேர்தல் முடிந்தும் கூட்டம் நடத்தவில்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி கூட்டம், 2024, பிப்., 29ம் தேதி நடந்தது. அதன்பின், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால், மாநகராட்சி கூட்டத்தை நடத்த முடியவில்லை.இந்த நிலையில், தேர்தல் முடிந்தும், இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், ஐந்து மண்டலங்களிலும், சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இதுகுறித்து, கவுன்சிலர்கள் கூறியதாவது:தேர்தல் முடிந்த பின், சென்னை மாநகராட்சியில் கூட்டம் நடத்தி முடித்துள்ளனர். ஆனால், தாம்பரம் மாநகராட்சியில் இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை. இங்குள்ள மேயர், மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காததே இதற்கு காரணம்.கூட்டம் நடத்தினால் தான், பல பணிகளுக்கு நிர்வாக அனுமதிக்கான தீர்மானம் கொண்டுவரப்படும். இதற்கு முன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான பணி உத்தரவு, இறுதி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும், புதிய பணிகளும் இடம் பெறும்.வார்டுகளில் உள்ள குறைகளை, மேயர், துணைமேயர், கமிஷனர் முன் எடுத்துக் கூறி, அதை சரிசெய்ய நடவடிக்கை முயற்சி எடுக்கப்படும். ஆனால், கூட்டமே நடத்தாமல் இருந்தால், எங்களது குறைகளை எப்படி தெரிவிக்க முடியும்.ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, 'டெண்டர்' வைத்தால் தானே பணிகளை துவக்க முடியும். எந்த வேலையும் முறையாக நடக்கவில்லை.தற்போது, கூட்டம் நடத்தாமல் இருப்பதால், அடிப்படை பணிகளையும் செயல்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. அதனால், மாதா மாதம், மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தாம்பரம் மாநகராட்சியில், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டப்பணிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி கமிஷனரை நேற்று மாலை சந்தித்து, மனு அளித்தனர்.குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு கட்டணம் செலுத்துமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது. மாடம்பாக்கம் - சிட்லப்பாக்கம் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.பூங்காக்கள் முறையான பராமரிப்பின்றி சமூக விரோத கூடாரமாக மாறிவிட்டது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும், அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை