உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாமூல் தர மறுத்த வியாபாரிக்கு வெட்டு

மாமூல் தர மறுத்த வியாபாரிக்கு வெட்டு

பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் சூர்யா, 25. இவரது கடைக்கு, நேற்று மாலை இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கும்பல், சூர்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டது.பணம் தர மறுத்ததால், கடைக்குள் புகுந்த கும்பல், கல்லா பெட்டியில் இருந்த விற்பனை பணத்தை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றது.தடுக்க முயன்ற சூர்யாவின் தலையில், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. பலத்த காயமடைந்த சூர்யா, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த பொன்னேரி போலீசார், அருகில் உள்ள கடைகளின் 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை