உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தினந்தோறும் திவ்யப்பிரபந்தம் ஸ்ரீ சங்கரா டிவியில் துவக்கம்

தினந்தோறும் திவ்யப்பிரபந்தம் ஸ்ரீ சங்கரா டிவியில் துவக்கம்

சென்னை, ஸ்ரீ சங்கரா 'டிவி'யில் 'தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்' என்ற புதிய தொடர் நிகழ்ச்சிக்கான துவக்க விழா, தி.நகரில் நடந்தது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் மடாதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.இந்த புதிய தொடர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள வெங்கடேஷ் பேசியதாவது:ஆன்மீக பக்தியை செழுமைப்படுத்தி, அடுத்த 11 ஆண்டுகளுக்கு, ஸ்ரீ சங்கரா டிவி வாயிலாக பகவானை நோக்கி, பக்தர்களை கைப்பிடித்து அழைத்து செல்ல இருப்பதே, இந்த தொடரின் நோக்கம்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்படும்.தொன்மையான வேதத்தை எளிய நடைமுறையில் ஒட்டுமொத்த தமிழகம் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளோம். தமிழகத்தின் கலாசார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தை உலகத்துடன் இணைப்பதும் ஆகும். தினமும் காலை 8:30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை