உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தடுப்பு சுவர் பாதியில் நிறுத்தியதால் அபாயம்

தடுப்பு சுவர் பாதியில் நிறுத்தியதால் அபாயம்

கீழ்க்கட்டளை:பல்லாவரம் -- துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், ஈச்சங்காடு சந்திப்பிலிருந்து கீழ்க்கட்டளை நோக்கி திரும்பும் வளைவில், ஏரியின் போக்கு கால்வாய் உள்ளது.இந்த கால்வாயின் தடுப்பு சுவர், பாதி கட்டுமானத்துடன் விடப்பட்டுள்ளது. தற்போது மெட்ரோ ரயில் விரிவாக்க பணி நடப்பதால், சாலையின் அகலம் மிகவும் சுருங்கிவிட்டது.இதனால், கனரக வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தடுப்பு சுவர் இல்லாமல், பாதி கட்டுமானத்துடன் நிறுத்தப்பட்டுள்ள கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது.தடுப்பு சுவர் பணியை முழுமையாக முடித்து, வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ