உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடற்கரையில் எரிக்கப்படும் மின் கழிவுகளால் ஆபத்து

கடற்கரையில் எரிக்கப்படும் மின் கழிவுகளால் ஆபத்து

திருவொற்றியூரில், என்.டி.ஓ., குப்பம், திருச்சினாங்குப்பம், கிளிஜோசியம் நகர், திருவொற்றியூர் குப்பம், ராமகிருஷ்ணா நகர் கடற்கரை.எண்ணுாரில், சின்னகுப்பம், தாழங்குப்பம் உட்பட பல இடங்களில் கடற்கரை பகுதிகள் உள்ளன. இந்நிலையில், சில சமூக விரோதிகள், கடற்கரைகளில் சட்டவிரோதமாக மின்சார கழிவுகளை எரித்து, செம்பு எடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.இதுபோன்ற பணிகளால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால், கடற்கரை மணல் பகுதியும் கறுப்பாக மாறி, அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. கடல் வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இது போன்ற சமூக விரோதிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாஸ்கர், எண்ணுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ