உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணுக்கு மிரட்டல் டில்லி வாலிபர் கைது

பெண்ணுக்கு மிரட்டல் டில்லி வாலிபர் கைது

சென்னை, ஆன்லைனில் பழக்கமான பெண்ணிடம், நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு ஏமாற்றியது மட்டுமல்லாமல், ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டல் விடுத்தவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.தேனாம்பேட்டையைச் சேர்ந்த, 40 வயது பெண்ணின் கணவர் போலீசில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில், தன் மனைவிக்கு ஆன்லைன் வாயிலாக, டில்லியைச் சேர்ந்த ஆகாஷ்குமார் என்கிற ராகுல், 31, என்பவர் பழக்கமாகி உள்ளார். பழக்க வழக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, அவ்வப்போது விமானம் வாயிலாக சென்னை வந்து, மனைவியை சந்தித்துள்ளார். பழகியபோது, 1 லட்சம் ரொக்கம், 20 சவரன் நகையை வாங்கிவிட்டு, திரும்ப தருவதாக கூறியுள்ளார். ஆனால், வாக்குறுதி அளித்தப்படி பணத்தை திருப்ப தரவில்லை. கொடுத்த பணத்தை கேட்டால், பழகிய போது எடுத்த படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டி வருகிறார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, டில்லியில் பதுங்கியிருந்த ராகுலை நேற்று முன்தினம் கைது செய்தனர். சென்னை வரவழைக்கப்பட்ட ராகுல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை