உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐகோர்ட் உத்தரவை அடுத்து ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு ஜி.என்.டி., சாலைக்கு விடிவு

ஐகோர்ட் உத்தரவை அடுத்து ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு ஜி.என்.டி., சாலைக்கு விடிவு

மாதவரம், மாதவரம், மாநகர பேருந்து பணிமனை அருகே, அயனாவரத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவர், ஜி.என்.டி., சாலையில், 2,170 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து, கட்டடம் கட்டி வைத்திருந்தார். அதில், ஹோட்டல், குளிர்பான விற்பனை கடை, பட்டறை உள்ளிட்டவை இயங்கி வந்தன.இதனால், அந்த பகுதியில் சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் பணிகள் முழுமை பெறாமல் இருந்தன. ஆக்கிரமிப்பு குறித்து, நெடுஞ்சாலைத்துறையின் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு பின், கட்டடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி, நேற்று காலை மாநில நெடுஞ்சாலைத்துறையினர், மாதவரம் போலீசார் பாதுகாப்புடன், ஜே.சி.பி., இயந்திரங்கள் வாயிலாக, ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்றினர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.'மாதவரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால், 2.20 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அங்கு விடுபட்ட சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன' என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி