உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியாபாரிகள் சங்க பேரவை எழும்பூரில் ஆர்ப்பாட்டம்

வியாபாரிகள் சங்க பேரவை எழும்பூரில் ஆர்ப்பாட்டம்

சென்னை, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் மாநில பொருளாளர் பொன்னுசாமி தலைமையில், கள்ளுக்கடையை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத், ஹரிநாடார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில், மதுவிலக்கே இலக்கு கையெழுத்து மற்றும் 51 லட்சம் 'மிஸ்டு கால்' இலக்கு உறுதி மொழி எடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் பேசியதாவது : காமராஜர் மது இல்லாமல்தான் தமிழகத்தை ஆட்சி செய்தார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவோம் என்றார், அக்கட்சியின் எம்.பி., கனிமொழி. தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என, அனைத்து கட்சியைச் சார்ந்தவர்களும் மது ஆலை நடத்தி வருகின்றனர்.கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. நிவாரணம் கொடுக்க வேண்டுமென்றால் கள்ளச்சாராயம் விற்றவர்களின் சொத்தையோ அல்லது சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் சொத்துக்களையோ பறிமுதல் செய்து, அவற்றிலிருந்து வரும் பணத்தை கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை