உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அகரத்தில் கழிவுநீர் ஓடுவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு?

அகரத்தில் கழிவுநீர் ஓடுவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு?

தாம்பரம், : தாம்பரம் அடுத்த அகரம்தென் ஊராட்சியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.அடுத்த நகர்புற தேர்தலில், இவ்வூராட்சி, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.இங்கு, கால்வாய், சாலை, குடிநீர் குழாய் உள்ளிட்ட வசதிகள், போதிய அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கால்வாய் முறையாக இல்லாததால், கழிவுநீர் சாலையில் ஓடுவதால், கொசு தொல்லை அதிகரித்து, காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது, இருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.அப்பகுதி மக்கள் கூறியதாவது:இப்பகுதியில், பல ஆண்டுகளாக கால்வாய் வசதியே இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலைகளில் தேங்கியுள்ளது.இதனால், கொசு தொல்லை அதிகரித்து, துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.கொசு தொல்லையால், காய்ச்சல் பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இப்பகுதியை ஆய்வு செய்து, கொசு தொல்லையை கட்டுப்படுத்தி, காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ