உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பக்தர்கள் வேப்பிலை அணிந்து கங்கையம்மனுக்கு நேர்த்தி கடன்

பக்தர்கள் வேப்பிலை அணிந்து கங்கையம்மனுக்கு நேர்த்தி கடன்

காரப்பாக்கம், ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில், கங்கையம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, தினமும் அபிஷேகம் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, அம்மனுக்கு பட்டு புடவை அணிந்து, பல வண்ண மலர்களால் மலர் அலங்காரம், குங்கும அலங்காரம் செய்து, 15,000 வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அம்மை நோயால் பாதித்து குணமடைந்த பக்தர்கள், வேப்பிலையால் உடையணிந்து நேர்த்தி கடன் தீர்த்தனர். கோவில் வளாகத்தில் 1,000 பெண்கள் கூடி பொங்கலிட்டனர். இவ்விழாவை, கோவில் அறங்காவலர் லியோ என் சுந்தரம் முன்னின்று நடத்தினார்.அதேபோல், முடிச்சூர் எல்லையம்மன் கோவிலில், 9ம் ஆண்டு ஆடிப்பூர அம்பாள் அவதாரம், ஒரு லட்சத்து ஒரு வளையல் அலங்காரம் மற்றும் ஊஞ்சல் உற்சவ விழா, நேற்று முன்தினம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, நிருத்தியோபாசனா மண்டலி நாட்டியக் குழு மாணவியரின் பரதநாட்டியம் நடந்தது. இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி