உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிதிலமடைந்த பள்ளி கட்டடம் மாணவர்கள், பெற்றோர் அச்சம்

சிதிலமடைந்த பள்ளி கட்டடம் மாணவர்கள், பெற்றோர் அச்சம்

கோடம்பாக்கம், கோடம்பாக்கத்தில், சிதிலமடைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், புலியூர் என்.எஸ்.கே., சாலையில், சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு, பிளஸ் 2 வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன், சாலையோரம் கட்டப்பட்ட பள்ளி கட்டடம், மிகவும் சிதிலமடைந்து உள்ளது. சாலையில் இருந்து பார்த்தால் தெரியும் அளவிற்கு, கட்டடத்தின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், பள்ளி கட்டடத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், மழைக்காலத்தில் இப்பள்ளி வளாகத்தில், மழைநீர் தேங்கும் பிரச்னையும் நிலவி வருகிறது. இவ்விரு பிரச்னைகளையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, உடனே தீர்வு காண வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை