மேலும் செய்திகள்
உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம்
31-Jul-2024
திருவொற்றியூர்:திருவொற்றியூர், எண்ணுார் விரைவு சாலை, எல்லையம்மன் கோவில் சந்திப்பு அருகே, மாநகராட்சி விளையாட்டு திடலில் 'விபத்தில்லா பயணம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடந்தது.போக்குவரத்து துணை கமிஷனர் குமார், உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் சாய் தீனா பங்கேற்றார்.இதில், இளைஞர்கள், சிறுவர்கள் வாலிபால் போட்டி, சிலம்பம், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.விழாவில், திரைப்பட நடிகர் தீனா பேசியதாவது:பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த பைக்குகளை வாங்கிக் கொடுக்காதீர்கள். அதன் மூலம், அதிவேக பயணத்தில் விலை மதிப்பில்லாத உயிரை இழக்க நேரிடும்.ஸ்கூட்டர், பைக்கில் பயணிக்கும் இருவருமே, ஹெல்மெட் அணிய வேண்டும். மதுபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது. விபத்தில்லாத நாளை உருவாக்க, காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு நல்குவோம்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தாமரை செல்வன், அருணகிரி, உதவி ஆய்வாளர் சாமுவேல் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.
31-Jul-2024