உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணுக்கு வெட்டு போதை ஆசாமிகள் கைது

பெண்ணுக்கு வெட்டு போதை ஆசாமிகள் கைது

கண்ணகி நகர்:கண்ணகி நகர் 7வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மைதிலி, 37. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார்.அப்போது, அங்கு கத்தியை சுழற்றியபடி வந்த மூன்று பேர், போதையில் மைதிலியிடம் தகாத வார்த்தை பேசினர்.பதில் பேசியதால், ஆத்திரமடைந்த செல்வம் என்ற நபர், கத்தியால் மைதிலியின் கையை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு, 16 தையல் போடப்பட்டது.இது குறித்து விசாரித்த கண்ணகி நகர் போலீசார், போதை ஆசாமிகளான செல்வம், 22, அஜய், 19, பொற்செல்வம், 22, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ