உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை விழிப்புணர்வு கிரிக்கெட் நண்பர்கள் அணி சாம்பியன்

போதை விழிப்புணர்வு கிரிக்கெட் நண்பர்கள் அணி சாம்பியன்

ஆவடி, இளைஞர்கள், மாணவர்கள் இடையே போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், கடந்த 11ம் தேதி கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது.இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பிரிவில் 64 அணிகள், காவல் துறையைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. எட்டு ஓவர் அடிப்படையில் நடந்த இப்போட்டியில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பிரிவில் நண்பர்கள் அணியும், எம் போர் பாய்ஸ் அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறின.ஆவடி போலீஸ் கமிஷனரக ஆயுதப்படை மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், நண்பர்கள் அணி வெற்றி பெற்றது. ஜாலி பிரதர்ஸ் மூன்றாம் இடத்தையும், பிளாக் புல்ஸ் நான்காம் இடத்தையும் பெற்றன.காவல் துறை அணிகளுக்கான போட்டியில், ஆர்.சி., அணியுடன் காவல்துறை விளையாட்டு குழு அணி மோதியது.இதில் ஆர்.சி., அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை