புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, படேல் நகரிலுள்ள பழைய கட்டடத்தில், வாலிபர்கள் கும்பலாக போதை ஊசி, போதை மாத்திரைகள் பயன்படுத்துவதாக, புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.சம்பவ இடத்தில் போலீசார் நேற்று ஆய்வு செய்த போது, அங்கு இரு வாலிபர்கள் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் பயன்படுத்தியது தெரிந்தது.விசாரணையில் அவர்கள் தண்டையார்பேட்டை, விநாயகபுரம் 9வது தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன், 22, புது வண்ணாரப்பேட்டை, சிவன் நகர் 2வது தெருவைச் சேர்ந்த ஆனந்த், 22, என தெரிந்தது.இவர்கள் அளித்த தகவலின்படி, தண்டையார்பேட்டை படேல் நகர், 3வது தெருவைச் சேர்ந்த முகமது ஆசிக், 27, நேதாஜி நகர் 3வது தெருவை சேர்ந்த ஜவாத் ஷெரிப், 29, ஆகியோரை பிடித்தனர். இவர்களிடமிருந்து 150 போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் இரண்டு பைக்குகள், நான்கு மொபைல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.நால்வரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.போதை ஊசி, மாத்திரை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள்.