உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அணுகு சாலை அமைக்காததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

அணுகு சாலை அமைக்காததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

மேடவாக்கம், மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ், போதிய இட வசதி இருந்தும், அணுகு சாலை அமைக்காததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்திக்கின்றனர்.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:தாம்பரம், சேலையூர், கவுரிவாக்கம் உள்ளிட்ட பகுதியிலிருந்து மாடம்பாக்கம், சோழிங்கநல்லுார், கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம், நன்மங்கலம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழே, இடது பக்கமாக பயணிக்க வேண்டும்.ஆனால், இடது பக்கம் அணுகு சாலை அமைக்கப்படாததால், பாலத்தின் வலது புறம் உள்ள சாலையில், 1,500 அடி துாரம் சென்று, பின் இடது பக்கமாக திரும்பி, தங்கள் பகுதிக்கு பயணிக்கின்றனர்.வாகன ஓட்டிகள் தவிர, அணுகு சாலையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் பயிலும் மாணவ - மாணவியரும், பாதுகாப்பு இன்றி, பாலத்தின் கீழே, வலது பக்கம் பயணிப்பதால், எதிர் திசையிலிருந்து வரும் வாகனங்களோடு மோதி, விபத்து ஏற்படுகிறது. போதிய இட வசதி இருந்தும், பாலத்தின் இடது பக்கம் அணுகு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து, விரைவில் அணுகு சாலை அமைத்து, விபத்தில்லா பகுதியாக மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ