உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் விடும் லாரிகளை தடுத்தால் பகுதிவாசிகளுக்கு கொலை மிரட்டல் எல்லை பிரச்னையால் அதிகாரிகளும் கைவிரிப்பு

கழிவுநீர் விடும் லாரிகளை தடுத்தால் பகுதிவாசிகளுக்கு கொலை மிரட்டல் எல்லை பிரச்னையால் அதிகாரிகளும் கைவிரிப்பு

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜவஹர்நகர், எழில்முக நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.ஓ.எம்.ஆரில் இருந்து ஜவஹர் நகர் செல்லும் சாலையின் வடக்கு திசை, சென்னை மாவட்டம், மாநகராட்சி எல்லையில் உள்ளது. தெற்கு திசை, செங்கல்பட்டு மாவட்டம், நாவலுார் ஊராட்சி எல்லையில் உள்ளது.லாரிகளில் எடுத்து வரப்படும் கழிவுநீர், தெற்கு திசையில் உள்ள தனியார் காலி மனைகள் மற்றும் அரசு இடங்களில், நள்ளிரவில் கொட்டுப்படுகிறது.இதனால், அங்குள்ள நிலத்தடி நீர் மாசடைவதுடன், கழிவுநீரால் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதிமக்கள் கூறினர்.இது குறித்து, ஜவஹர்நகர், எழில்முகநகர் பகுதிமக்கள் கூறியதாவது:நாவலுாரில் உள்ள மால், திரையரங்கு, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேற்றும் கழிவுநீர், நள்ளிரவில் காலிமனைகளில் கொட்டப்படுகிறது.தினமும், 10க்கும் மேற்பட்ட லாரிகளில் கழிவுநீர் கொட்டுகின்றனர். அருகில் வாரியம் சார்பில் குடிநீர் வினியோகிக்கும், ஆழ்துளை கிணறு உள்ளது.கழிவுநீர் தொடர்ச்சியாக கொட்டுவதால், நிலத்தடி நீர் மாசடைந்து, குடிநீரும் சுகாதார சீர்கேடாக வருகிறது.கழிவுநீர் லாரிகளை பலமுறை பிடித்து, செம்மஞ்சேரி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம். இருந்தும், இப்பிரச்னை தொடர்கிறது. நேரடியாக தட்டிக் கேட்டபோது, லாரி உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கூறினால், 'கழிவுநீர் கொட்டும் பகுதி எங்கள் எல்லையில் இல்லை' என கைவிரிக்கின்றனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுப்பதில்லை.கழிவுநீரால், 500 குடும்பங்களும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறோம். பிரச்னையின் தன்மையை உணர்ந்து, கழிவுநீர் கொட்டுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ