உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பால் முடிவு 4 சாலைகள் விரிவாக்கம்! ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை

போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பால் முடிவு 4 சாலைகள் விரிவாக்கம்! ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை

சென்னை, சென்னையில், போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நான்கு சாலைகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை விரிவாக்கம் செய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஓட்டேரி குக்ஸ் சாலையை விரிவாக்கம் செய்தது போல், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிகளில், 1,857 கி.மீ., நீளமுள்ள 10,628 சாலைகள் உள்ளன. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உத்தேசம்

அதன்படி, 1.25 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக உத்தேசிக்கப்பட்டு உள்ளது.இதனால், காலை மற்றும் மாலை, 'பீக் ஹவர்ஸ்'களில், பிரதான சாலை முதல் உட்புற சாலை வரை, போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னையிலுள்ள பெரும்பாலான சாலைகளை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வுடன் இணைந்து விரிவாக்கம் செய்ய, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.இதற்காக, அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் சமீபத்தில் நடந்தது.இந்த கூட்டத்தில், சென்னையின் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.இதில், முதல் கட்டமாக, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, அடையாறு எல்.பி., சாலை, நியூ ஆவடி சாலை ஆகிய நான்கு சாலைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.அதன்படி, 80 அடி சாலையாக உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, 100 அடி சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது.

நெரிசல் குறையும்

இதன் வாயிலாக மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல், 60 அடி அகலம் உள்ள எல்.பி., சாலை, 100 அடி சாலையாக அகலப்படுத்தப்படுத்தப்படும். இதன் வாயிலாக மத்திய கைலாஷ், திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். அதே போல, 60 அடி அகலம் உள்ள நியூ ஆவடி சாலையில், சில குறிப்பிட்ட இடங்களில் 100 அடி சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. மேலும், 33 அடி கொண்ட பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, 60 அடி சாலையாக மாற்றப்பட உள்ளது.இந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து அப்புறப்படுத்தவும், சாலையை விரிவுபடுத்துவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யவும், பணிகள் துவங்கியுள்ளன. அறிக்கை தயார் செய்தே பின், அரசிடம் ஒப்புதல் பெற்று, சென்னையில் சாலை விரிவாக்கப் பணி துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.

இந்த விரிவாக்கத்தின் போது, சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பின், அப்பகுதியின் பாதசாரிகள் வரத்திற்கு ஏற்ப, நடைபாதை அகலம் அமையும்.இப்பணிகளுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கும்.- ஆர்.பிரியா,சென்னை மாநகராட்சி மேயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

jebaraj s
ஜூலை 20, 2024 20:07

Idhae போல் சென்னை முழுவதும் ஆக்ரமிப்பிகள் அகற்றப்பட வேண்டும் குறிப்பாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ம்.டீ.ஹ.ரோடு , கொன்னுரு ஹைரோடு, புரைசைவாக்கம் ரோடு ..


Ibrahim Ali A
ஜூலை 19, 2024 21:10

சென்னை பொறுத்தவரை இது ஒரு நல்ல செயல்தான் சென்னை மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் அக்கரைப்பு எங்கெல்லாம் உள்ளது உடனே அகற்ற வேண்டும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது இடம் கொடுக்கக் கூடாது நன்றி


panneer selvam
ஜூலை 17, 2024 23:26

It is just an announcement to attract people attention . No one have guts to touch the illegal occupants of road sideways . More over they are there for years and even for legal landowners , there is no enough funds with Chennai Corporation to pay compensation . Another spreading of good feeling message just to fool the people .


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை