உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய முதியவர் கைது

பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய முதியவர் கைது

கொளத்துார், கொளத்துார், திருப்பதி நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் விஜயகிருஷ்ணா, 44. இவரது வீட்டின் அருகே, பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார்.தண்ணீர் ஊற்றுவதில், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயகிருஷ்ணா வீட்டின் வாசல் அருகில், பாஸ்கர் நேற்று முன்தினம் காலை மண்ணை கொட்டியுள்ளார்.இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது, பாஸ்கரின் தந்தை வேணு, 67, என்பவர், அங்கிருந்த கல்லால், விஜயகிருஷ்ணாவை தாக்கியுள்ளார்.காயமடைந்த அவர், அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின், கொளத்துார் போலீசில் புகார் அளித்தார்.அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, வேணுவை கைது செய்து, நேற்று முன்தினம் இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பாஸ்கரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி