உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை மின் நுகர்வு 9.75 கோடி யூனிட் 

சென்னை மின் நுகர்வு 9.75 கோடி யூனிட் 

சென்னை, சென்னை முழுதும் உள்ள வீடு, தொழிற்சாலை என, அனைத்து பிரிவுகளிலும் ஒரு நாள் முழுதும், அதாவது 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சார அளவு மின் நுகர்வு எனப்படுகிறது. இது, தினமும் சராசரியாக, 6 - 7 கோடி யூனிட்களாக உள்ளது. இந்தாண்டு சுட்டெரித்த கோடை வெயில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போன்றவற்றால், மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்தது. இதனால், சென்னை மின் நுகர்வு இம்மாதம், 3ம் தேதி அதிக அளவாக, 9.74 கோடி யூனிட்களாக அதிகரித்தது. பின், சென்னை உட்பட பல மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. இதனால், 'ஏசி' சாதன பயன்பாடு குறைந்தது. இந்நிலையில், கடந்த திங்கள் முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மூன்று வாரங்களுக்கு பின், நேற்று முன்தினம் சென்னை மின் நுகர்வு, 9.75 கோடி யூனிட்களாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ