உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து ஏசி மெக்கானிக் உய ிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஏசி மெக்கானிக் உய ிரிழப்பு

தாம்பரம், தி.,நகர், ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார், 26. 'ஏசி' பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். தாம்பரம், மெப்ஸ் வளாகத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில், ஒரு வாரமாக நண்பர்களுடன் சேர்ந்து, 'ஏசி' பழுது நீக்கும் வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம், பணி நடந்து கொண்டிருந்த இடத்தின் கீழ் வெல்டிங் வேலை நடந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து, 'ஏசி' இயந்திரத்தின் காப்பர் வடத்தின் மீது பட்டது. பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரேம்குமார் மின்சாரம் பாய்ந்து, மயங்கி விழுந்தார்.குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில் இறந்தார். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ