உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகர பஸ் நிறுத்தம் ஆக்கிரமிப்பு தனியார் வாகனங்கள் அட்டூழியம்

மாநகர பஸ் நிறுத்தம் ஆக்கிரமிப்பு தனியார் வாகனங்கள் அட்டூழியம்

அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள, மாநகர பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தனியார் வாகனங்களால், பயணியர் கடும் அவதியடைகின்றனர்.அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அமைந்தகரை பகுதியில், ஆம்பா மால் என்ற பேருந்து நிறுத்தம் உள்ளது.இந்த நிறுத்தத்தில் தடம் எண்கள்: '29கே, 15ஜி, 15பி, 27பி' உள்ளிட்ட மாநகர பேருந்துகள் நின்று செல்லும்.இங்கிருந்து நாளொன்றுக்கு நுாற்றுக்கணக்கான பயணியர் கீழ்ப்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல், பிராட்வே உள்ளிட்ட இடங்களுக்கு பயணிக்கின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வந்த இந்த பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து, தனியார் வாகனங்கள் படையெடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால், மாநகர பேருந்துகள் போக்குவரத்து நிறைந்த சாலையில் நடுவே நின்று செல்வதால், பயணியர் கடும் அவதிப்படுகின்றனர்.வழக்கமாகவே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள், தனியார் வாகனங்களால், காலையும் மாலையும் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ