உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேடவாக்கத்தை மையப்படுத்தி சிற்றுந்து இயக்க எதிர்பார்ப்பு

மேடவாக்கத்தை மையப்படுத்தி சிற்றுந்து இயக்க எதிர்பார்ப்பு

மேடவாக்கம், தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையின் முக்கிய சந்திப்பு மேடவாக்கம். இங்கு, பள்ளிக்கரணை சரக காவல் நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, தனியார் கல்லுாரி மற்றும் பல்வேறு மொத்த, சில்லரை வணிக கடைகள், நிறுவனங்கள் அதிகம் உள்ளன.பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து ஆவடி, அம்பத்துார், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நேரடி பேருந்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் மேடவாக்கம் சந்திப்புக்கு வந்து, அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணிக்கின்றனர்.தவிர, மேடவாக்கத்தைச் சுற்றி வசிப்போருக்கு இப்பகுதியே பிரதான வணிக தளம் என்பதால், இங்குள்ள நான்கு பேருந்து நிறுத்தங்களிலும், மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக உள்ளது. எனவே, மேடவாக்கம் சந்திப்பை மையமாக வைத்து, இங்கிருந்து வேளச்சேரி, சோழிங்கநல்லுார், பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம், தாம்பரம் மற்றும் மடிப்பாக்கம் ஆகிய இடங்களுக்கு எளிதில் சென்றுவர, மினி பஸ் வசதியை அரசு ஏற்படுத்தி தரவேண்டும்.இதனால், 'பீக் ஹவர்' மட்டுமின்றி, அனைத்து நேரங்களிலும் மக்கள் சிரமம் இன்றி பயணிப்பர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இவ்விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி, உகந்த நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ