உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குன்றத்துாருக்கு நீதிமன்றம் அமைக்க எதிர்பார்ப்பு

குன்றத்துாருக்கு நீதிமன்றம் அமைக்க எதிர்பார்ப்பு

குன்றத்துார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் இருந்து பிரித்து, 2019 நவம்பரில் குன்றத்துார் தாலுகா புதிதாக உருவாக்கப்பட்டது. குன்றத்துார், மாங்காடு, கொளப்பாக்கம், படப்பை, செரப்பணஞ்சேரி ஆகிய ஐந்து குறுவட்டங்களில் 91 வருவாய் கிராமங்கள் உள்ளன. குன்றத்துார், மாங்காடு ஆகிய இரண்டு நகராட்சிகள், அய்யப்பன்தாங்கல், கோவூர், ஆதனுார் உட்பட 42 ஊராட்சிகள் உள்ளன.மாங்காடு, குன்றத்துார், சோமங்கலம், மணிமங்கலம் ஆகிய நான்கு காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. குன்றத்துார் தாலுகாவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.குன்றத்துார் தாலுகா புதிதாக உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும், இங்கு நீதிமன்றம் இல்லை. இதனால், வழக்கு சம்பந்தமாக ஸ்ரீபெரும்புதுார் செல்ல வேண்டியுள்ளது.ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஏற்கனவே அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தீர்ப்பு கிடைக்க தாமதம் ஏற்படுகிறது.எனவே, குன்றத்துார் தாலுகாவில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'குன்றத்துார் தாலுகாவில் நீதிமன்றம் புதிதாக அமைந்தால், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் வழக்குகள் எண்ணிக்கை குறையும். 'இதனால், அங்கு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க முடியும். 'குன்றத்துார் சுற்று வட்டார மக்களுக்கு, வீண் அலைச்சல், பணம் மற்றும் நேரம் விரயமாவது தடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை